Published : 21,Sep 2017 01:38 PM
சாலையில் செல்லும் காட்டாற்று வெள்ளம்!

கொடைக்கானல், பழனி இடையேயான சாலையில் புதிதாக வடிகால்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் சாலையின் நடுவே உள்ள கும்பூர்வயல், புல்லூர் எஸ்டேட் மற்றும் வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மழைநீர் வடிகால்கள் உள்ளன. இதனால் பலத்த மழை பொழியும் சமயங்களில், மற்ற பகுதிகளில் தண்ணீர் செல்ல வடிகால்கள் இல்லததால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் சாலை வழியாக செல்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்காதவகையில் புதிதாக வடிகால்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் செந்திலிடம் கேட்டபோது, புதிய வடிகால்கள் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.