“ராட்வைலர் நாய்கள் கடித்தால் கை எலும்பே நொறுங்கி விடும்; அதனால்..” விலங்கு நல ஆர்வலர்கள் சொல்வதென்ன?

ராட் வைலர்... சென்னையில் ஒரு குழந்தைக்கு நேரிட்ட விபரீதத்தின் மூலம் தமிழ்நாட்டையே அச்சுறுத்தியுள்ள பெயர்... ராட் வைலர் நாய்கள் குறித்தும், இதன் தன்மைகள் குறித்தும் பார்க்கலாம்...
ராட் வைலர்
ராட் வைலர்pt web

செய்தியாளர் குழுவுடன் ரவிக்குமார்

ராட் வைலர்... 5 வயது சிறுமியை கடித்து குதறிய இந்த இன நாய் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது... ராட் வைலர் நாய்களை இந்தியாவில் வளர்க்கலாமா? அதற்கு தடை இருக்கிறதா? என்ற கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ராட் வைலர்

ராட் வைலர் இன நாய்களை இறக்குமதி செய்யவும், விற்கவும், இனப்பெருக்கம் செய்யவும், இந்திய அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. ஆக்ரோஷமானது, அபாயகரமானது என்பதாக குறிப்பிட்டு, பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் புல்டாக், காகசியன் ஷெப்பர்டு, மாஸ்கோ கார்டு, கங்கல், போஸ்பெல் உள்பட 23 நாய் இனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் ராட் வைலர் முக்கிய இடத்தில் உள்ளது.

நாய்களின் தன்மையையும் அவற்றின் மூலமான ஆபத்தையும் உணராமல் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அதிகரித்துள்ளது. இவற்றால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்க, சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்ற கேள்விக்கு அதிர்ச்சியான பதிலே கிடைக்கிறது..

ராட் வைலர்
உ.பி | கணவரின் கைகளை கட்டிப்போட்டு சிகரெட்டால் சுட்டு சித்ரவதை! CCTV-ல் பதிவான மனைவி செய்த கொடுமைகள்

கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும்..

மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நகர்புற விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டம் 1997 இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாய் வளர்ப்பவர்கள் கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும். லைசன்ஸ் வாங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உரிமம் இன்றி வளர்க்கப்படும் நாய்களைப் பிடித்து வெளியேற்ற சட்டம் எதுவும் கிடையாது. அந்த வகை நாய்களை பாதுகாக்க வேண்டும் என்பதே சட்டமாக உள்ளது” என தெரிவித்தார்.

ராட் வைலர் வகை நாய்கள், ரோமானியர் காலத்திற்கு முந்தியவை. கால்நடை மந்தைகளை பாதுகாக்கவும், வண்டி இழுக்கவும் பேரிடர் காலங்களில் மீட்புப்பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டவை. இன்றும் கூட, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், பண்ணைகளின் காவலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. பண்ணைகளில் வளர்க்கப்படும் செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாட வரும் ஓநாய் உள்ளிட்ட வன விலங்குளை விரட்டுவதற்கான தேர்வாக ராட் வைலர் நாய்கள் அமைந்துள்ளன.

ராட் வைலர்
கேரளா|வெளிநாடு செல்லும் குஷியில் செல்போன் பேசிக்கொண்டே அரளிப்பூவை சாப்பிட்ட செவிலியர்! பறிபோன உயிர்!

ராட்வைலர் மிக மூர்க்கமானவை

ராட் வைலர் நாய் வளர்ப்பவரான தனுராய் கூறுகையில், “ஒரு சில நேரங்களில் நாய் மனரீதியாக பாதிக்கப்படும்போது எந்த வித நிகழ்விலும் நம்மைத் தாக்கும். நாய் வளர்க்கும்போது குட்டி போட்டதில் இருந்தே நாம் அதைப் பாதுகாக்க வேண்டும். குட்டிகளுக்கு குடல்புழு மருந்துகளை கொடுக்க வேண்டும்., அடுத்து தொடர்ச்சியான தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். ரேபிஸ் தடுப்பூசியையும் செலுத்த வேண்டும். ஆண்டுக்கொருமுறை தடுப்பூசி தவணைகளை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தி இருந்தால்தான் குழந்தைகள் அல்லது வேறு யாரையாவது கடித்தாலும் ரேபிஸ் பாதிப்பு வராது” என்கிறார்.

ராட் வைலர் வகை நாய்களின் பற்கள், மேல் தாடையில் 22, கீழ்தாடையில் 20 என, கத்திரிக்கோல் வடிவில் பல்வரிசை அமைந்திருக்கும். பிற வகை நாய்கள் ஆவேசமாகி கடிக்கும் வேகத்தை விட, ராட் வைலர் நாய் கடிக்கும் வேகமும் தீவிரமும் அதிகமானது. அதாவது, ராட் வைலர் நாய் கடித்தால், மனிதர்களின் கை எலும்பு நொறுங்கி விடும். 2 உரிமையாளர்கள் இருந்தால், தினமும் உணவு தரும் ஒரு உரிமையாளருக்கே கட்டுப்படும். இவையெல்லாம் கடந்து, ராட் வைலர் நாய் இனங்கள் மிக மிக மூர்க்கமானவை.

ராட் வைலர்
கைதாகி கொண்டு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய சவுக்கு சங்கர்! அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!!

கருணை கொலை செய்யப்பட வேண்டும்

கால்நடை மருத்துவரான பாலாஜி இதுகுறித்து கூறுகையில், “ராணுவம் மற்றும் காவல்துறையினர் இவ்வகை நாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். மோப்பம்பிடித்தல் போன்ற உணர்வுகள் அதிகமுள்ளவை. ராட்வைலர் உள்ளிட்ட நாய் வகைகள் எளிதில் ஆக்ரோஷமடைந்துவிடும்” என்றார்.

செல்லப்பிராணிகளாக வெளிநாட்டு நாய்களை வளர்க்கவும், கட்டுப்பாட்டை மீறும் நாய்களைக் கையாளயும் இந்தியாவில் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி விலங்குகள் நல ஆர்வலரிடம் கேட்டோம்.

விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் இதுகுறித்து கூறுகையில், “நாய் மிக மூர்க்கத்தனமாக இருக்கும்போது, அதாவது ஓனருக்கே கட்டுப்படாமல் பிறரைத் தாக்க முற்படுகிறது என்றால், அந்த நாயை அந்த வீட்டில் இருந்தோ அல்லது அந்தப் பகுதியில் இருந்தோ அப்புறப்படுத்தப்பட வேண்டும். அந்த நாய் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும். இதுதான் சட்டம்” என்கிறார்.

நன்கு பயிற்சியளித்து, முறையாக பராமரித்து வளர்த்தால் மட்டுமே, ராட் வைலர் வகை நாய்கள், ஆபத்து விளைவிக்காமல் சாந்தமாக செயல்படும். இவற்றில் எது குறைந்தாலும், அதன் குணம் மாறும். விபரீதங்கள் நிகழும் என்பது, நாய் வளர்ப்போரில் தொடங்கி, கால்நடை வளர்ப்போர் வரையில் இருப்போரின் கருத்தாக இருக்கிறது.

ராட் வைலர்
ஈரோடு: தங்க நகைகளுடன் சாலையில் கவிழ்ந்த வாகனம் - எத்தனை கிலோ நகைகள் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com