”வாக்கு ஜிகாத்தா, ராம ராஜ்ஜியமா? நீங்கதான் முடிவு பண்ணணும்” - பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பரப்புரை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று, பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிpt web

7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில், மூன்றுகட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 3-ஆம் கட்டமாக மே 7 (இன்று) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. எஞ்சியிருக்கும் தொகுதிகளில் தேர்தல் பணிகள் சூடுபிடித்து வருகின்றன. அந்த வகையில் பாஜகவுக்காக பிரதமர் மோடியும், காங்கிரஸுக்காக மூத்த தலைவர் ராகுல் காந்தியும் போட்டிபோட்டு பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று, பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டுப் பாருங்கள். மக்களின் நம்பிக்கை அல்லது தேசநலன் பற்றி காங்கிரஸ் மற்றும் i-n-d-i-a கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு.. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடி
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி!

ஒவ்வொரு கட்டமாக காங்கிரஸுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப்பையும் காங்கிரஸ் காட்டுகிறது. பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப்போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயேகங்களைச் செய்கிறார்கள். வரலாற்றின் திருப்புமுனையில் இந்தியா உள்ளது. வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிக்க: என்னை விட்டுவிடுங்கள்’ ரூ.20 ஆயிரத்திற்காக சிறுவனைக் கொடுமைப்படுத்திய நண்பர்கள்!#ViralVideo

பிரதமர் மோடி
தேர்தல் 2024 | ஜனநாயக கடமையாற்றினார் பிரதமர் மோடி!

இதற்கிடையே, “விலை கொடுத்து ஆட்சியைப் பிடிப்பதே பாஜகவின் நோக்கம்” என காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்; வேலையின்மை, பெண் கொடுமை, பாகுபாடுகள் ஆகியன பாஜக மற்றும் மோடியின் நோக்கத்தால் ஏற்பட்டவை” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அச்சச்சோ அப்படியா!! தோனி தாமதமாக பேட்டிங் செய்வது குறித்து எழும் விமர்சனங்கள்.. வெளிவந்த ஷாக் உண்மை!

பிரதமர் மோடி
”மக்களை சந்திக்க முடியாதவர்கள்..” - சோனியா காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com