“அந்த கெட்டப் பின்னாடி நெல்சனுக்கு தேவைப்படும்” - கலகலப்பில் மிரட்டிய கவினின் ’Bloody Beggar’ Promo!

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நாயகனாக நடிக்கும் Bloody Beggar திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவபாலன் இயக்குகிறார்.
கவின், கிங்ஸ்லி, நெல்சன்
கவின், கிங்ஸ்லி, நெல்சன்pt web

இயக்குநர் நெல்சனின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அளவிற்கு அவரது அனொன்ஸ்மெண்ட் வீடியோக்களும் கிடைக்கும். கோலமாவு கோகிலா படத்தில், ‘எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு’ எனும் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அனைத்து வீடியோக்களுக்கும் தொடர்கிறது. இடைஇடையே நெல்சன் அடிக்கும் கவுன்ட்டர்கள் தனி ரகம். அவருடன் கிங்ஸ்லியும் சேர்ந்தால் என்னவாகும் என சொல்லத் தேவையில்லை. அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ளது புதிய அனொன்ஸ்மெண்ட் விடியோ.

ஜெயிலர் படம் மூலமாக மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன், பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான கனா காணும் காலங்கள் என்ற சீரியலை இயக்கிய நெல்சன், அதனைத்தொடர்ந்து சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் என்ற படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இத்துடன் அவரின் திரைப்பயணம் முடிந்துவிடுமோ என்று அனைவரும் நினைத்த நேரத்தில், கோலமாவு கோகிலா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்து பிரபலமானார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு டாக்டர், விஜயின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார்.

இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் , ''FILAMENT PICTURES'' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகும் முதல் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

வீடியோவில் சிவபாலன் புதிய கதைக்கு தயாரிப்பாளரை தேடுவதுபோல பேசிக்கொண்டிருக்க, கிங்ஸ்லி நெல்சனைக் கோர்த்துவிடுகிறார். கதாநாயகனாக கவின் நடிக்க, முதற்கட்டமாக காஸ்டியூம் டெஸ்ட் நடக்கிறது. அதில் கவினை ’பிச்சைக்காரர்’ போல் இருக்க, புதிதாக இருக்கிறதே என நெல்சனும் தயாரிக்க ஒப்புக்கொள்கிறார்.

இறுதியில் கிங்ஸ்லி அடிக்கும் பஞ்ச் தான் சிறப்பு. அந்த பிச்சைக்காரர் உடைகளை எதற்கும் தயாராக எடுத்துவையுங்கள் என்கிறார் கிங்ஸ்லி. நெல்சன் எதற்கென்று கேட்க, படம் முடிந்த பின் உனக்குத் தேவைப்படும் என்கிறார். படத்திற்கு bloody beggar என பெயரிடப்பட்டுள்ளது. ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com