நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு... எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது? டிப்ஸ்

ஜெனிட்டா ரோஸ்லின்

நீரிழிவு நோய்க்கு என்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் , எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்

தாரணி கிருஷ்ணன் உணவியல் நிபுணர் | PT

எதை உண்ணலாம்?

இதற்கு சியா விதைகள் என்று பெயர். இவற்றை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அத்துடன் சிறிது பால் அல்லது கொய்யாவை சேர்த்து சாப்பிடலாம்.

சியா விதைகள் | ஃபேஸ்புக்

ஆளி விதைகள்

ஆளி விதைகள் எனப்படும் இவ்விதைகளை வறுத்து, பொடியாக அரைத்து தோசை இட்லி மாவு ,சூப் , சாம்பார் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்.

ஆளி விதைகள் | ஃபேஸ்புக்

கொய்யா

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் அதை அப்படியே விதைகளுடன் சாப்பிடும்போது அதிக அளவு நார்ச்சத்து கொண்டுள்ள சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது.

கொய்யா | ஃபேஸ்புக்

பப்பாளி பழம்

பப்பாளி பழம் இதய நோய் மற்றும் உடலில் வீக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றது. இப்பழத்தை முழு பழமாக சாப்பிடுவது நல்லது.

பப்பாளி பழம் | ஃபேஸ்புக்

குதிரைவாலி அல்லது திணை

குதிரைவாலி அல்லது திணையை வறுத்தோ, முளைக்க வைத்தோ, புளிக்க வைத்தோ... இட்லி, அப்பம், பொங்கல், உப்மா போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். இவை குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

திணை அரிசி் | ஃபேஸ்புக்

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பாக்கெட்டுகளில் சேமித்துவைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அவை அதிக அளவு கார்போஹைட்ரேட் உடையதாகவும் குறைந்த அளவு நார்ச்சத்து உள்ளதாகவும் இருக்கிறது.

பாக்கெட் தின்பண்டங்கள் | ஃபேஸ்புக்

சர்க்கரை, வெல்லம் அல்லது பனை சர்க்கரை

சர்க்கரை, வெல்லம் அல்லது பனை சர்க்கரையை அதிக அளவு உண்ணும்போது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

சர்க்கரை, வெல்லம் | ஃபேஸ்புக்

மைதா மற்றும் சோள மாவு

மைதா மற்றும் சோள மாவு இவை இரண்டிலும் நார்ச்சத்து இல்லை. இவை தயாரிக்கப்படும்போதே அதில் உள்ள சத்துகள் எல்லாம் அகற்றப்பட்டுவிடுகின்றது.

மைதா | ஃபேஸ்புக்

சிவப்பு இறைச்சிகள்

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சிவப்பு இறைச்சிகள். இவை இதய தமனிகளில் அடைப்புகளை உருவாக்கி இதய நோய் உருவாக காரணமாக அமைகிறது.

இறைச்சி | ஃபேஸ்புக்

ஹாம் இறைச்சி

ஹாம் என்பது ஒருவகையான பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகை . இவை அதிக கொழுப்பைபினையும் அதிக சோடித்தையும் கொண்ட இறைச்சி.

ஹாம் | ஃபேஸ்புக்

மாம்பழம் மற்றும் பலா

மாம்பழம் மற்றும் பலா போன்ற பழங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.

மாம்பழம் | ஃபேஸ்புக்