போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்ற ஹமாஸ்.. மக்களின் மகிழ்ச்சி சில மணிநேரம் கூட நீடிக்காத சோகம்!

ஹமாசின் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் பாலஸ்தீன மக்களின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்ட நிலையில் அது சில மணி நேரம் கூட நீடிக்காத நிலை காசாவில் ஏற்பட்டுள்ளது. ரஃபாவின் எல்லைகளை கடந்து இஸ்ரேலின் ராணுவ டேங்குகள் சரமாரியான தாக்குதலை தொடங்கியுள்ளன.
போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி
போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிpt web

செய்தியாளர் பாலவெற்றிவேல்

2023 அக்டோபர் 7 ஆம்தேதி தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போர் 6 மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. காசா பகுதியில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என காசா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வடக்கு காசா, கான் யூனிஸ், காசா குன்று உள்ளிட்ட இடங்களில் 30,000 க்கும் மேற்பட்ட வீடுகளை முழுவதுமாக இஸ்ரேல் ராணுவம் அழித்துவிட்ட நிலையில் அதன் கவனம் தற்போது தெற்கு திசையை நோக்கி திரும்பியுள்ளது.

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ரபா எல்லை பகுதியில் குறிப்பாக கிழக்கு ரஃபாவில் இருக்கும் பகுதியில் போருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அங்கிருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். இந்நிலையில் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளில் சமாதான பேச்சுவார்த்தையின் படி ஹமாஸ் தலைவர்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி
"இனியாவின் சிறுகதைகள்” – ஆங்கிலத்தில் நீதிக்கதைகள் புத்தகம் எழுதி அசத்திய 10 வயது தஞ்சை சிறுமி!

ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றும் ஏற்றுக்கொள்ளாத இஸ்ரேல் 

ஹமாஸ் தலைவர்கள் ஒப்பந்தத்தை ஏற்ற நிலையிலும், இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதன்படி இஸ்ரேல் எல்லை வழியாக கிழக்கு ராஃபாவில் பல்லாயிரக்கணக்கான டேங்குகளை இஸ்ரேல் ராணுவம் இறக்கியுள்ளது. தொடர்ச்சியாக தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தெற்கு காசா பகுதியில் முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எகிப்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்களது தூதர்களின் ஆலோசனை இல்லாமல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் காசாவில் உள்ள 15 லட்சம் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக ஐநாவின் மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி
”வாக்கு ஜிகாத்தா, ராம ராஜ்ஜியமா? நீங்கதான் முடிவு பண்ணணும்” - பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பரப்புரை

சிறிது நேரம் கூட நீடிக்காத மகிழ்ச்சி

மேலும் அகதிகளுக்கான உணவுப் பொருட்கள், நிவாரண பொருட்கள் செல்வதற்கான பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தம் செய்துள்ள செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த பாலஸ்தீன மக்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் தாக்குதல் காரணமாக காசாவின் தெற்கு பகுதி சிதைந்து வருவதாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மக்கள் போராட்டம்

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள், அந்நாட்டின் டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெதன்யாகுவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர். குறிப்பாக காசாவில் பணயக்கைதிகளாக சிக்கியிருக்கும் இஸ்ரேலியர்களின் உறவினர்கள் களத்தில் இறங்கி முழக்கமிட்டனர். போர் நிறுத்தும் நேரம் வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். டெல் அவிவ் நகரின் அயலோன் சாலையில் பேரணியாக செல்ல முயன்றவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி
நேற்று அமெரிக்கா.. இன்று ஐரோப்பா.. காட்டுத்தீயாய் பரவும் மாணவர்களின் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com