கருந்துளை
கருந்துளைPT

’ஒரே இருட்டா இருக்கே’ கருந்துளையில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? - நாசா வெளியிட்ட திக்.. திக் வீடியோ

கருந்துளையின் மர்மங்களை அலசும் நாசாவின் புதிய ஆய்வு

கருந்துளை... கருந்துளை என்று சொல்கிறார்களே அதன் அருகில் சென்றால் எப்படி இருக்கும் என்பதை நமக்கு விளக்குவதற்காக நாசா ஒரு உருவக காட்சியை காணொளியாக உருவாக்கி உள்ளது.

கருந்துளை:

விண்வெளியில் பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள கருந்துளை குறித்த ஆய்வானது இன்று நேற்று அல்ல... ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல் இந்திய விஞ்ஞான சந்திரசேகரன் வரை பலரும் தங்களது கணித தேற்றத்தில் மூலம் கிடைத்த கருத்துருவாக்கங்களை வெளியிட்டனர்.

அவர்களின் பலரும் நட்சத்திரங்களின் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற எரிபொருட்கள் தீர்ந்த பிறகு அவை சுருங்கும் என்றும் அந்த சுருக்கம் மிகப்பெரிய காந்தப்புலத்தை உருவாக்கி கருந்துளையாக மாறும் என கூறினர்.

கருந்துளை
M87 அண்டம்! பால்வீதியின் மையத்தில் பிரம்மாண்ட கருந்துளை.. பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு

அதாவது, நட்சத்திரங்கள் தன்னுள் எரிபொருள் (ஹைட்ரஜன், ஹீலியம்) இருக்கும்வரை அணுக்கரு இணைவு (Nuclear Fusion) காரணமாக, வெப்பத்தையும், ஒளியையும், தொடர்ந்து கொடுத்துவரும். அது தான் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் தங்களுக்குள் இருக்கும், எரிபொருள் தீர்த்து முடிந்தபிறகு தன்னுடைய மொத்த தொகுதியும் சுருங்கி அடர்த்தி அதிகரித்து சில வெள்ளை குள்ளன்களாகவும், சில நட்சத்திரங்கள் கருந்துளைகளாகவும் மாறுகிறது.

இந்நிலையில், கருந்துளைகள் அருகில் செல்லும் எந்த ஒன்றையும் அது தனக்குள் இழுத்துக் கொள்ளும். ஒளியை கூட! அதற்குக் காரணம், அபரிமிதமான ஈர்ப்பு விசை.

மாறாக நமது சூரியன் தன்னுள் இருக்கும் எரிப்பொருளை தீர்த்ததும் வெள்ளைக்குள்ளனாக மாறும், கருந்துளையாக மாறாது. காரணம், சூரியனின் நிறையைக் காட்டிலும் 1.44 மடங்கு (Chandrasekhar Limit) பெரிதாக உள்ள நட்சத்திரங்களே கருந்துளையாக மாறும் என்று தமிழ்நாட்டில் பிறந்த வானியல் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் நிரூபித்து, 1983ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், விஞ்ஞானிகள் தொலைநோக்கியின் உதவியுடன் பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அதன் சூப்பர் கம்ப்யூட்டரில் ஒரு அதிவேக கருந்துளை காட்சியை ஒன்றை உருவாக்கியுள்ளது,

நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தைச் சேர்ந்த வானியற்பியல் விஞ்ஞானி ஜெர்மி ஷ்னிட்மேன், மற்றும் விஞ்ஞானி பிரையன் பவல் இருவரும் இணைந்து இதை உருவாக்கி உள்ளனர்.

EVENT HORIZON TELESCOPE
EVENT HORIZON TELESCOPEface book

இதன்படி கருந்துளைக்குள் நாம் பறந்து சென்றால் எப்படி இருக்கும் என்பதை விளக்குவது போல உள்ளது இந்த காணொளி. 400 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள கருந்துளையை நெருங்கும் பொழுது, நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியும் கருந்துளையைச் சுற்றியுள்ள வாயு வட்டமும் பிரகாசமாக தெரிகிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவை மறைந்து கருந்துளைக்குள் சென்றால் அங்கு இருட்டை தவிர எதுவும் இல்லை. ஒரு இதற்கு ஒரு ஒலியையும் பொருத்தியுள்ளார் அந்த ஒலியானது நமக்கு பயம் கலந்த சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

தற்பொழுது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com