ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்... விசாரணை வளையத்தில் யார்? யார்? விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக!

திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் இறந்தது ஜெயக்குமார் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்pt web

செய்தியாளர் மருதுபாண்டி

காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனை மூலம் இறந்தது ஜெயக்குமார் உடையது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மர்ம மரணம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே பி கே ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டாம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் நான்காம் தேதி பாதி எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டார். உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் கொண்டுவரப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவடைந்து சொந்த கிராமமான கரைசுத்துபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயக்குமார்
“நடந்தாய் வாழி காவேரி” காவிரி ஆற்றுக்கு வந்த சோதனை... திருச்சியின் பரிதாப நிலை

இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ள எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படைகள் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில் யார்? யார்?

குறிப்பாக முன்னாள் அரசு ஊழியர் குத்தாலிங்கம், தொழிலதிபர் ஜேசுராஜாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, தனியார் பள்ளியில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 30 லட்சம் ரூபாய் பணம் தனக்கு தர வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அப்பள்ளியின் தாளாளரான ஜெய்கரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

ஜெயக்குமார்
“சிஏ படிக்கணும்னு ஆசை!” - சாதிவெறி தாக்குதலை உடைத்தெறிந்து கல்வியில் ஜொலித்த மாணவர் சின்னதுரை!

விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தனுஷ்கோடி ஆதித்தனிடம் தனிப்படை பிரிவை சார்ந்த ஆய்வாளர அஜிகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பகல் 12 மணி அளவில் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் உள்ள தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டிற்கு வந்த போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.

இதனிடைய திசையன்விளை அருகே கரைசுற்றுபுதூரில் உள்ள ஜெயக்குமாரின் கிழக்கு மாவட்ட அலுவலகத்திலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள உடல் ஜெயக்குமாரின் உடல் தான் என்பதை அறிவியல் முறையில் டி என் ஏ பரிசோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜெயக்குமார்
டெல்லி தீ விபத்து: பெரும் பொருட்சேதம்; நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை

விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக

இதனிடையே பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மாவட்ட செயலாளர் தங்கேஸ்வரன் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸூக்கு ஆதரவாக பணியாற்றிய போது 89 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்ததாக ஜெயக்குமார் தனது கடிதத்தில் எழுதியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்காக இந்த பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. எனவே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயக்குமார்
குமரி: திருமணத்திற்கு வந்த இடத்தில் கடலில் குளிக்கச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com