இன்னும் சில மணி நேரங்களில்.. ’Apple Event 2024’ | புதுசா என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..!

2022ம் ஆண்டிற்குப் பின்னர், இந்த முறை தான் IPADகளின் அடுத்த ஜெனரேசன் வெளிவர இருக்கிறது என்பதால் இந்த நிகழ்வின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
apple event
apple eventtwitter

இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவிருக்கும் Appleன் Let Loose நிகழ்விற்காக டெக் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கவிருக்கிறது. இந்த ஈவன்ட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம். 2022ம் ஆண்டிற்குப் பின்னர், இந்த முறை தான் IPADகளின் அடுத்த ஜெனரேசன் வெளிவர இருக்கிறது என்பதால் இந்த நிகழ்வின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

IPAD Pro 2024

2023ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் எந்த IPADஐயும் லாஞ்ச் செய்யவில்லை. இந்த ஆண்டு எப்படியும் IPAD Pro 2024 லாஞ்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களில் AI வசதிகள் வரிசைகட்டி நிற்பதால், Apple Ipadலும் அத்தகைய வசதிகளை எதிர்பார்க்கலாம்.

இதையும் படிக்க: அச்சச்சோ அப்படியா!! தோனி தாமதமாக பேட்டிங் செய்வது குறித்து எழும் விமர்சனங்கள்.. வெளிவந்த ஷாக் உண்மை!

apple event
Apple Watch Series 8 | ஆப்பிள் வாட்ச் வாங்க இதுவே நல்ல நேரம்..!

Apple M4 Chip

MacBook Air 13-inch M3, MacBook Air 15-inch M3 , MacBook Pro 14-inch M3 மாடல்களில் இருப்பது போல் , இந்த டேப்லெட்டிலும் M3 சிப்செட்டே இருப்பதற்கு வாய்ப்பதிகம். அதே சமயம், Pro மாடலில் மட்டும் M4 சிப்செட் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டேப்லெட்டின் AI பெர்பாமன்ஸை இந்த சிப்செட் அதிகரிக்கும் என நம்பப்படுவதால் M4 சிப்செட் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

iPad Air 2024

IPAD PROவைத் தொடர்ந்து எல்லோரும் எதிர்பார்க்கும் மற்றுமொரு கேட்ஜெட் ஆப்பிளின் IPAD AIR. ஸ்லிம்மான டிசைன், ப்ரீமியம் ஃபீல் என அனைத்து விஷயங்களில் டிக் அடிக்கும் ஒரு ஆப்பிள் கேட்ஜெட் என்றால் அது IPAD Air தான். 11 “, 12.9” என இரு அளவுகளில் IPAD AIR வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OLED IPAD டிஸ்பிளே

ஐஃபோன்களில் இருக்கும் OLED டிஸ்பிளே, IPAD PRO மாடலுக்கு முதன்முறையாக கொடுக்கப்படலாம் என தகவகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: மலேசிய கால்பந்து வீரர் மீது ‘ஆசிட் வீச்சு’ - ஒரே வாரத்தில் இரண்டாவது கால்பந்து வீரர் மீது தாக்குதல்!

apple event
இந்தியாவில் உற்பத்தியை ஐந்து மடங்காக அதிகரிக்க ஆப்பிள் திட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com