பைசன் திரைப்படம் - படப்பிடிப்பு தொடக்கம்
பைசன் திரைப்படம் - படப்பிடிப்பு தொடக்கம்ட்விட்டர்

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு தொடக்கம்!

பைசன் காளமாடன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் ஆகியோர் இன்று நெல்லை சென்றனர். பைசன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரிக்கிறது.

Bison new movie
Bison new moviept desk

நெல்லை சென்ற அவர்களை வரவேற்க திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே ரசிகர்கள் ஹோட்டல் முன்பு குவியத் துவங்கினர்.

பைசன் திரைப்படம் - படப்பிடிப்பு தொடக்கம்
இசையா, மொழியா - எது பெரிதென விவாதியுங்கள்; வன்மத்தை வெளிப்படுத்துவது ஏன்? இதுவரை நடந்தது ஓர் பார்வை

தொடர்ந்து தனியார் ஓட்டலில் இருந்து கிளம்பிய அவர்களுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர். மேலும் நடிகர் துருவ் விக்ரமுக்கு மாலை, சால்வை அணிவித்து ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின் விக்ரம் தொடங்கிவைக்க படப்பிடிப்பு தொடங்கியது. கீழ்க்காணும் அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com