சென்னை | தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்... குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான செவிலியர் தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் குழந்தை இறந்தது. சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தைபுதிய தலைமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா. இவர் சென்னை தியாகராயநகரில் தங்கி ஓராண்டாக தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன் வினிஷாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன் வினிஷா கர்ப்பமான நிலையில், அவருக்கு சமீபத்தில் அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்
தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்

இதனையடுத்து தனக்குத்தானே பிரவசம் பார்க்கலாம் என வினிஷா விபரீத முடிவு எடுத்துள்ளார். குழந்தை வெளியே வருவதில் சிக்கல் எழுந்ததால், அதன் இரு கால்களையும் அவர் வெட்டி எடுத்துள்ளார்.

பச்சிளம் குழந்தை
“தண்ணீர் பந்தல் கூட அமைக்க முடியவில்லை” – தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம்

இதனால் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு, குழந்தை உடலுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார்.

குழந்தையின் உடலை மருத்துவர்கள் பத்திரப்படுத்திய நிலையில், வினிஷா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி தியாகராயநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com