நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கணுமா? உங்கள் உணவு பொருட்களில் இதெல்லாம் இருக்கான்னு செக் பண்ணுங்க!

ஜெனிட்டா ரோஸ்லின்

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் உணவின் பங்கு என்பது முதன்மை வாய்ந்தது. எனவே எந்த வகையான உணவு பொருள்கள் உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் என்று விளக்குகிறார் உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

தாரணி கிருஷ்ணன் உணவியல் நிபுணர் | PT

எலுமிச்சை:

1. எலுமிச்சை வைட்டமின் சி அடங்கிய உணவு பொருள். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இதனை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எலுமிச்சை | முகநூல்

மாதுளை மற்றும் சாலியா விதைகள்:

2. மாதுளை மற்றும் சாலியா விதைகள் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது.

மாதுளை மற்றும் சாலியா விதைகள் | முகநூல்

புரத உணவுகள்:

3. பருப்பு, பால், முட்டை, மீன்,கோழி போன்ற புரத உணவுகள் உணவுகளை உட்கொள்து நோயெதிர்ப்பு செல்களை உருவாக்க உதவுகிறது.

பருப்பு, பால், முட்டை, மீன்,கோழி | முகநூல்

துத்தநாகம் உணவு பொருள்:

4. துத்தநாகம் அடங்கிய உணவு பொருள்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கும் டிஎன்ஏவின் ஒரு பகுதியாகும். உதாரணம் : வேர்க்கடலை

வேர்க்கடலை | முகநூல்

நெல்லிக்காய்:

5. நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய உணவு பொருள். இவற்றை தொடர்ந்து உண்பதன் மூலம் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்க வழிவகை செய்கிறது.

நெல்லிக்காய் | முகநூல்

பழவகைகள்:

6. பழவகைகளை உட்கொள்வது என்பது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும, உடலின் ஆற்றலை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றிகளாகவும் செயல்படுகிறது.

பழவகைகளை | முகநூல்

பூண்டு: 

7. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் ஒருவகையான வேதிப்பொருள் நோய்தொற்று மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் பிரச்னையை எதிர்த்துப் போராட உதவுகிறது.

பூண்டு | முகநூல்

பார்லி , ஓட்ஸ்:

8. பார்லி , ஓட்ஸில் காணப்படும் பி குளுக்கான் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கிறது.

பார்லி , ஓட்ஸ் | முகநூல்

தயிர்:

9. தயிரில் காணப்படும் ஏராளமான நல்ல பாக்டீரியாக்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.

தயிர் | முகநூல்

மஞ்சள்:

10. மஞ்சளில் உள்ள குர்குமின் எனப்படும் வேதிப்பொருள் பலவகையான நன்மைகளை தருகிறது. மேலும் உடலில் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றை தடுப்பதற்கும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

மஞ்சள் | முகநூல்