காருக்குள் ஏறியவுடன் ஏசி போடலாமா? ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! மெக்கானிக் சொல்லும் தகவல்

வெப்ப நாட்களில் நம்மைப்போன்று காரையும் பாதுகாக்கவேண்டும் என்கின்றனர் கார் மெக்கானிக்குகள்.
கார் மெக்கானிக்
கார் மெக்கானிக்PT

தமிழ்நாட்டில் கோடகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தை தாங்காது காருக்குள் ஏறியதும் ஏசியை ஆன் செய்யலாமா? இதனால் பாதிப்புகள் ஏற்படுமா என்ற பல கேள்விகள் நமக்கு ஏற்படுவது இயல்பு, இது குறித்து ஏசி மெக்கானிக் சரவணன் கூறுவது என்ன?

நீண்ட நேரம் வெயிலில் நின்றுவிட்டு காரினுள் ஏறியதும் ஏசியை போட்டுவிட்டு உடனடியாக வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டாதீர்கள். மேலும் ஏசி விண்டோவை முகத்திற்கு நேராக காற்றுவரும் போல் போடாதீர்கள். ஏனெனில் அந்த காற்றை சுவாசிக்கும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்படும்.

மேலும் டேஷ் போர்ட், சீட்கவர் ஆகியன பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருப்பதால், கண்ணுக்கே தெரியாத பிளாஸ்டிக் கழிவுகள் ஏசி காற்றுடன் கலந்து நமக்கு மூச்சு குழாய்க்குள் செல்லும். மேலும் வெயில் காலத்தில் காரை பாதுகாப்பது மிகவும் அவசியம்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com