தலைப்புச் செய்திகள் | கன்னத்தில் அறைந்த டி.கே சிவகுமார் முதல் வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது கன்னத்தில் அறைந்த டி.கே சிவகுமார் முதல் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இணையதளம், தொலைபேசி, பள்ளிகள், நூலகங்கள் வழியாக முடிவுகளை அறிய பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • www.tnresults.nic.in, www.dge.tn.gov.in தளத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதில் தேர்வு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மாணவர்கள் மதிப்பெண்களை அறியலாம்.

 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 • உதகை, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இன்று முதல் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் வந்து செல்ல தடையில்லை என்றும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
கொடைக்கானல் போறீங்களா? இ-பாஸ் பெற என்ன செய்ய வேண்டும்? இதோ விவரம்...
 • தமிழகத்தில் சேலம், பெரியகுளம், சிவகாசி, கரூர் உள்ளிட்ட நகரங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

 • மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக நாளை 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமடைந்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்ட்விட்டர்
 • காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கும் வராது, ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவும் மீண்டும் வராது. ஆகவே, பகல் கனவு காண்பதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமித் ஷா பேச்சு.

 • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வளம் மக்களிடமே வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேச்சு.

 • காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் தோளில் கை வைத்து புகைப்படம் எடுக்க முயன்றார். அதில் கோபம் அடைந்து அந்நிர்வாகியை கன்னத்தில் அறைந்தார் டி.கே. சிவக்குமார்.

 • ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஊழல் கட்சிகளாக உள்ளதால் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் புதிய தலைமுறைக்கு பேட்டி.

அண்ணாமலை
அண்ணாமலைpt web
 • நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் நீதியை பெற்றுத் தருவார் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

 • உடலும் உயிரும் கூடி இயங்கியதால்தான் இலக்கியம் என்ற குழந்தை பிறந்திருக்கிறது என்று இளையராஜா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற வைரமுத்து.

 • சில கற்றார் பேச்சும் இனிமையே என்று நடிகர் குமரிமுத்துவின் பேச்சை பகிர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவு.

 • கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை.

 • தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால், மின் தட்டுப்பாடு அபாயம் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • நாடு முழுவதும் 557 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில், உயிரியல் பாடப்பிரிவு வினாக்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து.

 • புதுச்சேரியில் ஏரிக்கரையை சுத்தம் செய்யும் பணியின்போது உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 • திருவாரூர் அருகே டாஸ்மாக்கில் கடனுக்கு மது பாட்டில் தர மறுத்த ஊழியர் மீது சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 • திருப்பத்தூரில் தார் சாலையை பெயர்த்து எடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கமிஷன் தராததால் சேதப்படுத்தியதாக தகவல்.

 • அரியலூரில் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் முருகன் கற்சிலை கண்டெடுப்பு. இந்நிலையில், வள்ளி, தெய்வானையுடன் காட்சித் தரும் முருகனை வழிபட்ட மக்கள்.

 • நாட்டின் 140 கோடி மக்களுக்காக அயோத்தி ராமரிடம் வேண்டி கொண்டதாக பிரதமர் மோடி பதிவு.

 • ஆள்கடத்தல் வழக்கில் கர்நாடகா எம்எல்ஏ ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு 4 நாள் போலீஸ் காவல் வைக்க, பெங்களூரு நீதிமன்ற உத்தரவு.

 • ஹங்கேரி பிரதமருக்கு எதிராக பிரமாண்ட கண்டன பேரணி. மேலும், வெறுப்பு, பிளவால் மக்கள் பாதிப்பு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

 • இலங்கையில் செங்குத்தாக இருந்த சிமெண்ட் பூச்சு கிணற்றுக்குள் விழுந்த யானையை நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்டுள்ளனர்.

 • கொல்கத்தாவின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் லக்னோ தோல்வி அணி தோல்வி. 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
அதே Meme..அதே Troll.. இந்தமுறை அடித்தது சென்னை! PBKS-ஐ வச்சிசெய்த CSK ரசிகர்கள்! ஜடேஜா படைத்த சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com