அதிக வரவேற்பை பெற்ற ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ட்ரைலரையும் வெளியீட்டுத் தேதியையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. இதனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் “த்ரிஷ்யம்”. கேரள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த படம் என தனி முத்திரை பதித்தது. திரையிடப்பட்ட அரங்குகளிலெல்லாம் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையோடு, பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த வெற்றிக்குப்பின்தான் “த்ரிஷ்யம்” படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்தான்.
த்ரில்லர் கதைக்கருவை குடும்பத்தோடு இணைத்திருந்த ’த்ரிஷ்யம் 2’ படத்தின் அதிக சதவீத படப்பிடிப்பும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு சமீபத்தில்தான் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை புத்தாண்டு அன்று 12 மணிக்கு நடிகர் மோகன்லால் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலரையும் வெளியீட்டு தேதியையும் மோகன்லால் அறிவித்துள்ளார். அமேசான் ப்ரைமில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் உலகம் முழுக்க வெளியாகிறது ’த்ரிஷ்யம் 2’. ட்ரைலரில் ஜார்ஜ் குட்டி தனது குடும்பத்தினரோட பழைய பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்துவிட்டாலும், ’அவர்கள்’ விடுவதாக இல்லை’ என்பதை உணர்த்துகிறது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி