காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண் - வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைசெய்த நபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்தவரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

image

சென்னை அரும்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 31 வயது பெண். இவரது வீட்டிற்கு முன்னே இருந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் ஓட்டுநர் முருகானந்தம்(49)
இவர் தற்போது அமைந்தகரையில் உள்ள முரளிதரன் தெருவில் வசித்து வருகிறார். நேற்று பெண் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் குடும்ப திருமணம் அதே வீட்டில் நடைபெற்று உள்ளது.


Advertisement

இந்த திருமண நிகழ்ச்சிக்கு முருகானந்தம் வந்துள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட பெண் காற்றுக்காக தனது வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியதாகத் தெரிகிறது. திருமண நிகழ்வில் கலந்து கொண்ட முருகானந்தம் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை  செய்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகானந்தத்தை கைது செய்தனர்.

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement