சமீபகாலமாக கோலிவுட்டில் அதிக வெற்றிகளை குவித்து முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்துவரும் விஜய் சேதுபதிக்கு தனது இயக்கத்தில் நடிக்க மணிரத்னம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் சேதுபதியுடன் இதுவரை ஐந்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். பல படங்களில் நடித்துவரும் விஜய்சேதுபதி 12 மாதங்கள் வரை கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை. இருப்பினும் மணிரத்னம் படத்தில் நடிக்க இசைவு தெரிவித்துள்ளதால் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும்படி இயக்குநர்களிடமும், படத்தயாரிப்பு நிறுவனங்களிடமும் கேட்டு வருகிறார் விஜய் சேதுபதி. மணிரத்னம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
சில ஆண்டுகளாக மணிரத்னம் இயக்கிய படங்கள் தோல்வியைத் தழுவின. ஓகே காதல் கண்மணி படம் மட்டுமே வெற்றி பெற்றது. அவர் கடையாக இயக்கிய காற்று வெளியிடை தோல்வியைத் தழுவியது. விஜய் சேதுபதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியைக் குவித்துள்ளன. தற்போது சமீபகாலமாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த 8 படங்களில் 7 படங்கள் வெற்றியைக் குவித்துள்ளன. கடந்த வாரம் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மணிரத்னத்துடன் விஜய்சேதுபதி கைகோர்க்க இருக்கிறார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி