[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

‘காய்ச்சலுக்காக ஊசி’ - அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்த குழந்தைகள்

2-child-blood-vomiting-for-fever-injection-by-govt-hospital-in-pudukottai

திருமயம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட 30 நிமிடத்தில் தங்களது இரண்டு குழந்தைகள் ரத்தவாந்தி எடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தன்னுடைய 5 வயது மகன் திவ்யன் மற்றும் 4 வயது மகள் கீர்த்தி ஆகிய இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இரு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் இருப்பதாக கூறி, இருவருக்கும் ஊசி போட்டு உள்ளனர். ஊசி போட்டு 30 நிமிடம் ஆனதும், இரு குழந்தைகளும் ரத்தவாந்தி எடுத்ததாகவும், மயக்கம் அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தவறான ஊசி செலுத்தியதன் காரணமாக தங்களுடைய குழந்தை ரத்தவாந்தி எடுத்து மயக்கம் அடைந்து விட்டதாக கூறி, மருத்துவர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அத்துடன், 104 டிகிரி காய்ச்சல் இருந்தும் மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை உள்நோயாளியாக அனுமதிக்கவில்லை என்றும், மருத்துவமனையில் பெட் இல்லை என்று கூறி உள்நோயாளியாக அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் பெற்றோர்கள் குறை கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் பெற்றோர்களை சமாதானம் செய்து இரண்டு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் மருத்துவருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close