[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பங்கு சந்தை முடிவுகள் : சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

sensex-ends-463-pts-lower-nifty-below-11-000

இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நான்காவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தை மதிப்பு கடும் சரிவை சந்தித்திருக்கிறது. மும்பை பங்கு சந்தை மதிப்பீடான சென்செக்ஸ் இன்றைய தின முடிவில் 463 புள்ளிகள் சரிந்து 37,018 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்த சரிவு 1.23 சதவிகித வீழ்ச்சியாகும். அத்துடன் தேசிய பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி 138 புள்ளிகள் குறைந்து 10,980 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது 1.24% சரிவாகும். உள்நாட்டு பொருளாதாரத்தின் தற்காலிக பலவீனம் மற்றும் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தன்மையால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய வர்த்தக நாளில் மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி ட்வின்ஸ், ஹிந்துஸ்த்தான் யூனிலிவர் ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன. வேதாந்தா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இறுதி நேரத்தில் சரிந்தன. ஆனால் இறுதி நேரத்தில் மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ், பவர் க்ரிட், பஜாஜ் ஆட்டோ ஆகியவை ஏற்றம் கண்டன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close