[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை

i-dont-have-hero-face-yogibabu

ஹீரோ முகமும் அதற்கு தகுதியும் தனக்கு கிடையாது என தெரிவித்துள்ள யோகிபாபு, கடைசி வரை காமெடியனாகத் தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

காமெடி நடிகர் யோகிபாபு வெளியிட்டுள்ள வீடியோவில் “எல்லோருக்கும் வணக்கம். நான் யோகி பாபு பேசுகிறேன். கடந்த சில நாட்களாகவே ‘நான் ஹீரோவாகத் தான் நடிப்பேன். காமெடியனாக நடிக்க மாட்டேன்’ என சிலர் போட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் ஹீரோலாம் இல்ல. ஹீரோ பண்ணும் அளவிற்கு இது முகமும் கிடையாது. தகுதியும் கிடையாது. தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தி விடக் கூடாது அல்லவா..? வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்.

Read Also -> பாகிஸ்தானை குறிப்பிடாதது ஏன்? ’ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு! 

‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் என்னிடம் ஒரு கதையை சொன்னார். ஒரு நாய் மற்றும் வெளிநாட்டுக்காரர் இதனை வைத்துதான் அந்த கதை. அவர்கள் வழிமாறி வந்து என்னிடம் மாட்டிக் கொள்கின்றனர். நார்மலா எப்போதும் போல காமெடி கேரக்டரில் தான் இப்படத்திலும் நடிக்கிறேன். மெயின் லீடு அந்த வெளிநாட்டு பெண்மணி மற்றும் நாய் தான். நான் ஒரு கூர்க்கா கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான்.

Read Also -> ரஜினியின் 'பேட்ட' இசை காப்பியடிக்கப்பட்டதா? - ரசிகர்கள் அதிர்ச்சி

ஏற்கெனவே ஒருசில இயக்குநர்கள் என்னை ஹீரோவாக்க அணுகினார்கள். நான் மறுத்தேன். இப்போது அவர்களெல்லாம் நாங்கள் சொல்லி நீங்கள் பண்ணவில்லை என்ற அளவிற்கு நினைக்கிறார்கள். சத்தியமாக சொல்கிறேன். இது ஹீரோ முகம்லாம் இல்லங்க. அதேபோல இயக்குநர் பாலாஜி மோகன் படத்திலும் லீடு ரோல் வேறு. ஆனால் நான் காமெடி கேரக்டரில் தான் நடிக்கிறேன். யார் என்ன சொன்னாலும் நம்பாதீங்க. நான் கடைசி வரை காமெடி தான் பண்ணுவேன். காமெடியனாவே என்னை பாருங்க”  என தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close