[X] Close

கமலுக்கு ஆதரவாக கைகோர்க்கும் உதயநிதி, பார்த்திபன்

Udhayanidhi--Parthiban-joining-in-support-of-Kamal

நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர்கள் பார்த்திபன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

தமிழக அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டதாக நடிகர் கமல்ஹாசன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என்றும், அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ஊழல் தொடர்பான பேச்சுக்கு தமிழக அமைச்சர் தெரிவித்து வரும் கருத்துகள் சிறுபிள்ளைத்தனமானது என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு என்ற அவர், கருத்துச் சுதந்திரம் அனைவருக்குமானது என்றும் கூறியுள்ளார்.


Advertisement

அதேபோல், ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் உரிமை உள்ளது என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது தந்தையும் எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து உதயநிதி இவ்வாறு பேசியுள்ளார். கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்க முடியுமே தவிர, கருத்து தெரிவிப்பதை யாரும் தடை செய்ய முடியாது என்றும் உதயநிதி கூறியுள்ளார்.

இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேவையற்ற விவகாரம் பெரிதாக்கப்படுவதாக கூறியுள்ளார். கமல் தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறிய கருத்தும் வன்கொடுமையே என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close