Published : 14,Jun 2017 05:22 AM

பாகுபலி சாதனையை முறியடிக்குமா ரஜினியின் 2.0?

Latest-informations-about-Rajni-s-2-0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 2.0 திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலைியல் இந்த படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால், பாகுபலியின் சாதனையை இது முறியடிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில், உருவாகி வரும் படம் 2.o. லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, படத்திற்கான ஒலி அமைப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் 2.o-வின் ஹிந்தி பதிப்புக்கான தியேட்டர் உரிமம் ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு தரப்பிடம் இருந்து ரூ.100 கோடி வரை பேசப்பட்டதாகவும், ஆனால் ஹிந்தி வினியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து ரூ.80 கோடிக்கே இசைந்து கொடுத்ததாகவும் தெரிகிறது. முன்னதாக, 2.0 தொலைக்காட்சி உரிமத்தை ₹110 கோடி கொடுத்து ஜீ நெட்வொர்க் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே படத்தின் பட்ஜெட் செலவு ரூபாய் 450 கோடிக்கு மேல் இதுவரை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியவில் அதிகளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையையும் 2.0 பெற்றுள்ளது. படம் வெளியானால் உலகம் முழுவதும் அதன் வசூல் வாரி குவித்து பாகுபலி சாதனையை முறியடிக்கும் எனவும் நம்பப்படுகிறது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்