[X] Close

"திட்டங்கள் இல்லை....வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் உள்ளது"

Rahul-Gandhi-complaints-about-Modi-s-rule

 

மத்திய அரசிடம் திட்டங்கள் ஏதுமில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள ராகுல் காந்தி, அதனை மறைக்க வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் சமூகத்தில் பாஜக அரசு பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி என்ன வாக்குறுதிகளை எல்லாம் கூறி ஆட்சிக்கு வந்தாரோ அதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார். வருடம் முழுவதும் 2கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். ஒரே சித்தாந்தங்களை கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இதர அமைப்புகளின் துணையுடன் நாட்டில் வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் பரப்பி இங்கு தலைவிரித்தாடி வரும் பல பிரச்சனைகளை மத்திய அரசு மறைத்து வருவதாகவும் ராகுல் தெரிவித்தார். மோடி அரசில் தொலைநோக்கு பார்வையும் இல்லை, குடிமக்கள் மீது பச்சாதாபமும் இல்லை என்றும் அவர் கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close