[X] Close

பைக் சண்டை: பாலத்தில் இருந்து தள்ளி தொழிலதிபர் கொலை

Murdered-in-Mumbai

சாதாரண பைக் சண்டைக்காக தொழிலதிபர் ஒருவரை பாலத்தில் இருந்து கீழே தள்ளிக் கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

நாசிக்கை சேர்ந்தவர் செய்யது (53). தொழிலதிபர். இவர் தனது காரில், நண்பர்களுடன் மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள தனது பேக்டரிக்கு நேற்று முன் தினம் இரவு சென்றுகொண்டிருந்தார். கார் கொங்கன் பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த பைக் ஒன்று இவர்கள் காரை உரசுவது போல சென்றது. அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். இதனால் செய்யது அவர்களை திட்டினார். நடுரோடில் பைக்கை நிறுத்திய அவர்கள், செய்யதிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. மூன்று பேரும் சேர்ந்து செய்யதுவை பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். செய்யதுவுடன் வந்தவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

பாலத்தின் கீழே கிடந்த செய்யதை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Advertisement

சாதாரண பைக் சண்டையால் நடந்த இந்தக் கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close