[X] Close

 “பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி” - ஸ்டாலினுக்கு தனுஷ் பதில் 

dhanush-thanks-to-stalin-

‘அசுரன்’ படத்தை பாராட்டியதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். 


Advertisement

எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’.  இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. 


Advertisement

இதைத்தொடர்ந்து அசுரன் படம் மட்டுமல்ல பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ‘அசுரன்’ படத்தை பாராட்டியதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close