[X] Close

பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு

case-filed-for-49-publicity-members-write-to-modi

மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்தப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பீகார் மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மதத்தின் பெயரால் இஸ்லாமியர் மற்றும் பட்டியலினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், உடனடியாக அவற்றை தடுக்க வேண்டுமெனவும் மணிரத்னம், அனுராக் காஷ்யப், சவுமியா சட்டர்ஜி, ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினர். 


Advertisement

மோடிக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது நாட்டின் நற்பெயரை கரைப்படுத்துதல், பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பீகார் மாநிலத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வ‌ழக்கில், 49 பேர் மீது தேசத்துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சர்தார் காவல் நிலையத்தில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close