Published : 19,May 2017 08:41 AM

அட அப்பாடக்கர்களா..! ஆபரேஷன் தியேட்டரில் ஆபாச போட்டோ!

take-photo-in-operation-theatre

ஆபரேஷன் தியேட்டரில் இளம்பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்ததாகக் கூறி டாக்டர்களும் நர்சும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிற்றுவலி பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக பிவண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கடந்த திங்கட்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது. வழக்கமாக, ஆபரேஷன் செய்யப்படும் இடத்தைச் சுற்றி துணியால் உடலை மூடுவது வழக்கம். ஆனால் இவருக்கு அப்படி மூடாமல், இடுப்பை மட்டும் துணியால் மறைத்துவிட்டு அவருக்கு மயக்க ஊசி போட்டனர். ஆனால் அவர் மயக்க நிலைக்கு செல்லவில்லை.

பின்னர் டாக்டர்கள் மனோஜ், அன்சாரி, நர்ஸ் அப்ஷனா ஆகியோர் செல்போனில் அவரின் முழு உடலையும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இது, ஆபரேஷனுக்காக படுத்திருந்தவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர் மனோஜின் மனைவியும் சம்பந்தமில்லாமல் வந்தார். பிறகு டாக்டர்களும் நர்சுகளும் அந்தப் பெண்ணின் உடல் குறித்து ஆபாசமாக பேசி கமென்ட் அடித்தனர். இது எல்லாம் ஆபரேஷனுக்கு வந்த பெண்ணுக்குத் தெளிவாகக் கேட்டது.

ஆபரேஷன் முடிந்த பின் இந்த சம்பவம் பற்றி தனது கணவனின் சொன்னார் அந்தப் பெண். அவர் பிவண்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்