[X] Close

நான் கேட்ட கேள்வியின் நோக்கம் வேறு: தூத்துக்குடி இளைஞர் பதில்

Tuticorin-youth-explanations-about-his-questions-towards-Rajinikanth

தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்திடம் சந்தோஷ் என்ற இளைஞர் ‘யார் நீங்க’ என கேட்டது வைரலாகியது. இந்த சூழலில் தன்னுடைய கேள்வியின் நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தபோது, ஆமா நீங்க யாருங்க? என இளைஞர் ஒருவர் வெறுப்புடன் கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே ‘நான்தான்பா ரஜினிகாந்த்’ என பதிலளித்தபடி நகரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து ‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா? சின்னக்குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலை ரஜினிக்கு சமர்ப்பிப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement

இந்த சூழலில் தன்னுடைய கேள்வியின் நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அந்த இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ என்னைப் பற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நான் கேட்ட நோக்கம் வேறு. மற்ற அரசியல் தலைவர்கள் பதவியில் இருந்தால்தான் மதிப்பு. ஆனால் ரஜினிக்கு அப்படியில்லை..‘ரஜினி’ என சொன்னாலே மதிப்புதான். ஆனால் 100 நாள் போராட்டத்திற்கு வரவில்லையே. வந்திருந்தால் எங்களுக்கு ஒரு படைபலமாக இருந்திருக்குமே. மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்ற எங்களுக்கான ஒரு உரிமையில்தான் கேட்டோன்” என தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close