Published : 07,Nov 2022 07:42 AM

அரையிறுதியில் பாகிஸ்தான்... சொமேட்டோ ட்வீட்டுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த பாக். நிறுவனம்!

zomato-order-placed-for-home-delivery-of-pak-team

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவை பாகிஸ்தானின் உணவு டெலிவரி நிறுவனமான கரீம் பாகிஸ்தான் கலாய்த்த ட்விட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதி சுற்றில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. ஏறக்குறைய வெளியேறும் நிலைமையில் சிக்கித்தவித்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து கொடுத்த வாழ்வு மூலம் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் இந்த எதிர்பாராத 'என்ட்ரி'யை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவை பாகிஸ்தானின் உணவு டெலிவரி நிறுவனமான கரீம் பாகிஸ்தான் கலாய்த்த ட்விட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று சொமேட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பாகிஸ்தான் அணியின் ஹோம் டெலிவரிக்காக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது' என ட்விட் செய்தது. அதாவது பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் நாடு திரும்புவார்கள் என்ற அர்த்தத்தில் அந்த ட்விட் உணரப்பட்டது.

image

இந்நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் நெதர்லாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது, வங்களாதேசத்தை வீழ்த்தியது காரணமாக பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு சர்ப்ரைஸாக நுழைந்தது. அந்த உற்சாகத்தில் பாகிஸ்தானின் வாகன சேவை மற்றும் உணவு டெலிவரி நிறுவனமான கரீம் பாகிஸ்தான் என்ற நிறுவனம் சொமேட்டோ பதிவிட்டிருந்த ரீட்விட் செய்துள்ளது. அதில், சொமேட்டோவுக்கு பதிலடியாக 'ஹோம் டெலிவரி நிராகரிக்கப்பட்டது' என ட்விட் செய்திருக்கிறது கரீம் பாகிஸ்தான்.

சொமேட்டோ மற்றும் கரீம் பாகிஸ்தான் ஆகிய இரு நிறுவனங்களும் ட்விட்டரில் இவ்வாறு வார்த்தைப் போர் செய்வது இது முதல்முறையல்ல. நடப்பு டி20 உலகக் கோப்பைதொடர் தொடங்கியது முதலே இந்த இரு நிறுவனங்கள் ட்விட்டரில் மறைமுகமாக மோதி வருகின்றன என்பது குறிப்பிடப்பட்டது.

பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றில் வருகிற 9ஆம் தேதி (புதன்கிழமை) நியூசிலாந்தை சந்திக்கிறது.

இதையும் படிக்கலாமே: சூப்பர் 12-ல் இந்தியாதான் டாப்! அரையிறுதியில் யார், யாருடன் மோதுகிறார்கள்? - முழுவிவரம்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்