Published : 19,Jan 2022 08:09 AM
பாஜக தனக்கு பிடித்த ஆயுதத்தை எடுத்துள்ளது; சோதனைகளால் பயம் இல்லை: ராகுல்காந்தி

பஞ்சாப் முதலமைச்சரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரான புபீந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் சந்தீப் குமாருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோத மணல் கடத்தல் புகார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புபீந்தர் சிங்கிற்கு சொந்தமான இடங்களில் இருந்து 4 கோடி ரூபாயும் அவரது நண்பர் சந்தீப் குமார் வீட்டில் இருந்து 2 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாஜக தனக்கு பிடித்தமான ஆயுதத்தை கையில் எடுத்திருப்பதாகவும் இதுபோன்ற சோதனைகளால் பயம் இல்லை என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 20ஆம் தேதி சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது.