உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அண்மையில் லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முயன்றார். ஆனால் அவரை சித்தாப்பூர் பகுதியில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், விருந்தினர் மாளிகையில் தடுப்பு காவலில் வைத்தனர். அப்போது தான் தங்கியிருந்த அறையை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்து, அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார் பிரியங்காகாந்தி.
இதையடுத்து “அந்த வேலைக்கு மட்டும் தான் அவர்கள் சரிபட்டு வருவார்கள் என மக்கள் நினைக்கின்றனர். அடுத்தவர்களுக்கு இம்சை கொடுப்பதும், எதிர்மறை எண்ணங்களை பரப்புவதும் தான் அவர்கள் செய்கின்ற ஒரே வேலை” என பிரியங்கா காந்தியை சாடியிருந்தார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இந்த நிலையில் வெள்ளி அன்று லக்னோவில் உள்ள பட்டியலின சமூக மக்கள் வசிக்கின்ற லவ குஷா நகர் பகுதிக்கு சென்றார் பிரியங்கா காந்தி. அப்போது அங்கிருந்த துடைப்பத்தை எடுத்த அவர் மகரிஷி வால்மிகி கோவில் வளாகத்தை சுத்தம் செய்யத் தொடங்கினார். அதோடு கோவிலில் தரிசனமும் செய்தார்.
“அந்த கருத்தின் மூலம் அவர் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. துடைப்பம் எடுத்து நாட்டையே சுத்தப்படுத்தி வரும் கோடான கோடி பேரை அவமானப்படுத்தி உள்ளார். சாதிய வன்மம் மிக்க கருத்து அவருடையது. ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தையும் அவர் அவமானப்படுத்தி உள்ளார்.
அதனால் தான் நான் இங்கு வந்து, உங்கள் எல்லோருடனும் சேர்ந்து சுத்தம் செய்தேன். சுத்தம் செய்வதும், துடைப்பம் பிடிப்பதும் சுயமரியாதை என்பதை அவர் தெரிந்துக் கொள்ளட்டும்.
இது வெறும் ஆரம்பம் தான். நாளை இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளும், துடைப்பம் பிடித்து வால்மிகி கோவில்களை சுத்தம் செய்வார்கள். யோகி ஆதித்யநாத்தின் கருத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்காது” என தெரிவித்துள்ளார் பியங்கா காந்தி.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை