[X] Close

விரைவில் கேப்டனாகிறாரா ரோகித் சர்மா? தீயாய் பரவும் தகவல்

விளையாட்டு

Rohit-Sharma-might-replace-Virat-Kohli-as-Team-India-captain

டி20 உலகக் கோப்பைக்கு பின்பு இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டானக்கப்படுவார் என்ற செய்தி தீயாய் பரவி வருகிறது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று பார்மெட்களிலும் விராட் கோலி கேப்டனாக செயல்படுகிறார். விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி மிக பிரமாதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறது. மிக முக்கியமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு விராட் கோலியையும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தெரிகிறது.

image


Advertisement

இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" ஊடகத்துக்கு பிசிசிஐ நெருங்கிய வட்டாரம் வெளியிட்ட தகவல்படி "விராட் கோலியே இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது. அவரை பொறுத்தவரை பேட்டிங்கில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த நினைக்கிறார். மேலும் ரோகித் சர்மாவுடன் கேப்டன் பொறுப்பை பகிர்ந்துக்கொள்வதில் கோலிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பார்மெட்களிலும் கேப்டனாக இருப்பது கோலியின் பேட்டிங்கிற்கு சிரமமாக இருப்பதால் அவரின் சுமையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய பின்பு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார் கோலி. பின்பு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு 2017 ஆம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கோலி தலைமையிலான இந்தியா 2017 சாம்பியன்ஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கும், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் அரையிறுதிக்கும் தகுதிப் பெற்றது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close