8 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது செல்ல நாயை பெண் ஒருவர் மீண்டும் கண்டுபிடித்த நெகிழ வைக்கும் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் வசிப்பவர் மாக்தலேனா. இவர் 8 வருடங்களுக்கு முன்பு ‘ஷிஹ் சூ ராக்ஸி’ என்ற செல்லப்பெயரை கொண்ட 3 வயதான நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
2013-ம் ஆண்டில் தனது தோட்டத்தில் இருந்த நாய் திடீரென்று காணாமல் போனதை அறிந்து மாக்தலேனா அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் நாய் கிடைக்கவில்லை. நாயின் உடம்பில் பொருத்தப்பட்டிருந்த ‘மைக்ரோ சிப்பை கொண்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் தேடியும் பயனில்லை. நாயை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடியலைந்த மாக்தலேனா, பல வாரங்களாகியும் கிடைக்காததால், நாய் திருடப்பட்டிருக்கலாம் அல்லது எங்கேனும் இறந்து போயிருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து, நாயை தேடுவதை நிறுத்திக்கொண்டார்.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இரவில் 8 வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோன ராக்ஸியை போன்று ஒரு நாய் தெருவில் சுற்றி திரிவதாக மாக்தலேனாவின் நண்பர் ஒருவர் அவருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த நாயை பார்த்த மாக்தலேனா, இது தனது ராக்ஸி போன்றுதான் உள்ளது என கூறினார்.
இதையடுத்து உறுதிபடுத்துவதற்காக நாயை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்று, நாயின் உடம்பில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளதா? தொடர்பு விபரங்கள் ஒத்துப்போகிறதா என சோதனை செய்தார். அதில் 8 வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோன அதே ராக்ஸி தான் இது எனவும் தற்போது இதற்கு 10 வயதாகி உள்ளது எனவும் கால்நடை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து 8 வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோன செல்ல நாய் திரும்ப கிடைத்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்த மாக்தலேனா, இதை விடச் சிறப்பான ஒரு உணர்வு ஒன்று இருக்க முடியுமா’ என நெகிழ்ச்சி தெரிவித்தார்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்