'ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான' உள்ளடக்கத்தை தடுக்க தவறியதற்காக தடை விதிக்கப்பட்டிருந்த டிக்டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
"ஆபாசத்தையும் ஒழுக்கக்கேட்டையும் பரப்புவதில் ஈடுபடும் அனைத்து கணக்குகளும் தடுக்கப்படும் என்று, டிக்டாக் நிர்வாகம் உறுதியளித்தபிறகு இந்த செயலி மீதான தடை நீக்கப்படுகிறது" என்று பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) ட்வீட் செய்துள்ளது."ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான" உள்ளடக்கத்தைத் தடுக்க தவறியதற்காக பாகிஸ்தான் அரசு, டிக்டாக் மீது 10 நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. சட்டவிரோத உள்ளடக்கத்தை தடுக்க நிறுவனம் தயாராக இருந்தால், டிக்டாக்குடன் கலந்துரையாடலுக்கு திறந்திருப்பதாக பி.டி.ஏ ஏற்கெனவே கூறியிருந்தது.
பாகிஸ்தானில் சுமார் 20 மில்லியன் டிக்டாக் பயனர்கள் உள்ளனர். கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தானில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாவது பயன்பாடாக டிக்டாக் உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Loading More post
மேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்
"நான் 100% தெலுங்கானாவின் மகள்!" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா
“தமிழகத்தில் நீட் தேர்வை கைவிடுங்கள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்
PT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்?
மகாராஷ்டிரா: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்
தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை
குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்
தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா? - ராகுல் காந்தி