கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தமன்னா: வைரலான ’வொர்க் அவுட்’ வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை தமன்னா, தொற்றில் இருந்து மீண்டு நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அவர், உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுவருகிறது.


Advertisement

ஹைதராபாத் நகரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற போது அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. முழுமையாக குணமடைந்து மும்பையில் ஓய்வாக நாட்களைக் கழித்துவரும் தமன்னா, தினமும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார்.

image


Advertisement

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன் உடல் வலிமையை உயர்த்துவதற்கு நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார் தமன்னா.

image

கொரோனா தன்னை வலிமையாக ஆக்கியுள்ளதாகவும் அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். தன் உடற்பயிற்சி வீடியோ மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் தமன்னா.


Advertisement

நீட் தேர்வு: இந்திய அரசுப் பள்ளி மாணவர்களில் தமிழக மாணவர் முதலிடம்!

loading...

Advertisement

Advertisement

Advertisement