அறிமுகத்துக்கு முன்பே அம்மாவை இழந்த ஜான்வி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது மகள் ஹீரோயினாக அறிமுகம் படத்தை பார்க்காமலேயே ஸ்ரீதேவி மறைந்துவிட்டது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

இந்தி நடிகர் மோஹித் மர்வா, அண்டாரா மோதிவாலா திருமணத்துக்காக, பிரபல நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றிருந்தார். மோஹித் இவர்களின் உறவினர். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. 


Advertisement

ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாவதாகக் கூறப்பட்டது. பின்னர் தெலுங்கில் அறிமுகமாவதாகவும் செய்திகள் வெளியானது. அதை மறுத்து வந்தார் ஸ்ரீதேவி.  இந்நிலையில் இந்தியில் ’தடக்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. ஹீரோவாக இஷான் ஹாட்டர் நடிக்கிறார். ஷசான்ங் கைதான் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இருந்ததால் பெற்றோருடன் நேற்றைய விழாவுக்குத் துபாய் செல்லவில்லை ஜான்வி.

இரண்டு மகள்களின் மீதும் அதிக பாசம் கொண்டவர் ஸ்ரீதேவி. மூத்த மகள், ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தைக் கூட பார்க்காமல் சென்றுவிட்டார் ஸ்ரீதேவி. இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை அளித்திருக்கிறது. 


Advertisement
loading...
Related Tags : Janhvi KapoorSridevi

Advertisement

Advertisement

Advertisement