[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

இந்திய தேசபக்தி பாடலைப் பாடிய பாகிஸ்தான் அரசியல்வாதி!

pak-politician-sings-saare-jahan-se-achchha-in-london

இந்தியாவை புகழும் தேச பக்தி பாடலான ’சாரே சஹான் சே அச்சா’ வை, பாகிஸ்தான் அரசியல் தலைவர் பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பாகிஸ்தானில், முட்டாஹிதா குவாமி இயக்கம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடத்தி வருபவர் அல்தாப் ஹூசைன். இவர் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசும்போது, ’’காஷ்மீர் பிரச்னை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அந் நாட்டு மக்களின் பெரும் ஆதரவோடு, அம்மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், காஷ்மீர் பழங்குடிகளை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தியதால், காஷ்மீர் மகாராஜாவாக இருந்த சிங், இந்தியாவின் உதவியை நாடினார்.

இதனால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. காஷ்மீருக்காக, பாகிஸ்தான் இந்தியாவோடு 4 முறை போர் தொடுத்து தோல்வி அடைந்தது. இருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான சதியை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளவில்லை’’ என்று கூறினார். இதையடுத்து இந்தியாவை புகழும் தேச பக்தி பாடலான ’சாரே சஹான் சே அச்சா’ வை, அவர் பாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் விவகராத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர், இந்தியாவுக்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close