[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

ஆற்றுக்கு அடியில் 28 கி.மீ ரயில் பாதை - சீனா புதிய கட்டுமானம்

china-builds-a-high-speed-railway-in-under-railway

வடக்கிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஆற்றுக்கு அடியில் சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது.

ஆசிய பிராந்தியத்திலேயே மிகச்சிறப்பான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க சீனா முனைப்பு‌காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள மிக நீளமான சங்பா ஆற்றுக்கு அடியில் சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணியை‌ சீனா தொடங்கியது. சவால் மிகுந்த இந்தப் பணியில் முதற்கட்டமாக சங்பா ஆற்றுக்கு அடியில் 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க ரயில் பாதை கட்டப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களாக உருவாக்கப்பட்டு வந்த இச்சுரங்க ரயில்பாதை தான், சீனாவில் ஆற்றுக்கடியில் அமைக்கப்பட்ட முதல் சுரங்க ரயில் பாதையாகும். மொத்தம் 28.6 கி.மீ. நீளத்திற்கு சுரங்‌க ரயில் பாதை அமைக்கப்படுகிறது. தண்ணீர் நிறைந்த ஆற்றை பல அடி ஆழத்திற்கு குடைந்து, இயந்திரங்களை சுரங்கத்திற்குள் இறக்கி இத்தகைய ரயில் பாதையை உருவாக்கியுள்ளதாக சீன ரயில்வே சுரங்க குழுமத்தின் பொறியாளரான ஜாவோ ஜுன் கூறியுள்ளார். 

இந்த ரயில் பாதை உருவாக்கப்படும்போது பல தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன என்றும், ஆறுகளின் வளைவுகளில் ரயில் பாதை அமைப்பது மிகவும் சவாலாக இருந்தது என்றும் அவர் கூறினார். நாட்டிலேயே முதன்முறையாக ஆற்றுக்கடியில் உருவாக்கப்பட்ட இந்தச் சுரங்க ரயில் பாதை பணி நிறைவுற்று, அடுத்த ஆண்டுமுதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close