[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: டீச்சர், மாணவன் பலி

teacher-and-student-dead-in-california

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் டீச்சரும் ஒரு மாணவனும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிறது சான் பெர்னார்டினோ. இந்தப் பகுதியை சேர்ந்தவர் ஆண்டர்சன். இவர் மனைவி, கரன் எலைன் ஸ்மித். அங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் சிறப்பு ஆசிரியை. எலைன் ஸ்மித்துக்கும் ஆண்டர்சனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று, வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் எலைன் ஸ்மித். அப்போது அங்கு வந்த ஆண்டர்சன் திடீரென துப்பாக்கியால் ஸ்மித்தை நோக்கிச் சுட்டார். இதில் அந்த இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் மீதும் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதில் எட்டு வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்தான். ஆண்டர்சனும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பீதியை கிளப்பியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close