[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

rameswaram-fishermen-indefinite-strike

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 73 பேரையும் அவர்களின் 108 விசைப் படகுகளையும் மீட்க வேண்டும் ,கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .‌

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் ‌என்று வேண்டுகோள் விடுத்துள்ள மீனவர்கள், படகுகள் சிறைபிடிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இறால் மீன்களின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்‌கை விடுத்தனர்.

மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 5 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும்‌, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு ‌தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் போராட்டத்தால் சுமார் 2 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close