[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சட்டைப் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் எடுத்த மனைவி : திண்டாடிய வேட்பாளர்

viluppuram-candidate-can-not-file-nomination-for-rs-500-reason-his-wife

சட்டைப்பாக்கெட்டில் இருந்த பணத்தை மனைவி எடுத்ததை அறி‌யாத கணவர் வேட்புமனுத்தாக்கலின் போது சிரமத்திற்கு ஆளானார். 

விழுப்புரம் தொகுதிக்கு போட்டியிட உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் என்பவர் சென்றிருந்தார். 12 ஆயிரத்து 500 ரூபாய் வைத்திருந்ததாக நினைத்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவர் வருகை தந்திருந்தார். ஆனால் தேர்தல் அலுவலகத்திற்குள் வந்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் குறைந்தது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவியை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது 500 ரூபாயை மனைவி காய்கறி வாங்க எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனால் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த அவர் மீண்டும் வீடு திரும்பினார். இதற்கு முன்னர் சட்டமன்ற, நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்களில் 7 முறை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள அரசன், இந்த முறை காய்கறிக்காக மனைவி எடுத்த பணத்தால் மனுத்தாக்கல் செய்யாமல் திரும்பினார். இருப்பினும் அவர் ரூ.500ஐ கொண்டுவந்து நாளை அல்லது மற்றொரு நாள் மனுத் தாக்கல் செய்வார் எனப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close