[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி

same-family-attempt-suicide-in-dindigul-collector-office

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் நாகம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை பொதுப்பாதைக்காக கேட்டு, அதே ஊரைச் சேர்ந்த 5 பேர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாகம்மாள் வீடு மீது முன்பு ஒருமுறை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 

மிரட்டல் குறித்து பலமுறை சாணார்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா தேவியிடம் நாகம்மாள் குடும்பத்தினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தங்களிடம் இருந்து நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாகம்மாள் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மண்ணெணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். 

அப்போது அவர்களிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து தற்கொலை முயற்சியை காவல்துறையினர் தடுத்தனர். இதனையடுத்து அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் அலுவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close