[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு

நீலகிரியில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

explosion-of-crackers-in-nilgiris

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட வருபவர்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி வனப்பகுதிகளிலுள்ள யானை, புலி, சிறுத்தை, மான், கரடி மற்றும் அரியவகை பறவை இனங்களுக்கு பட்டாசு வெடிப்பதால் பாதிப்பு ஏற்படும் என்பதால், வனப்பகுதியை சார்ந்த இடங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதுமலையைச் சுற்றியுள்ள 18 மலைக்கிராமங்களிலும், வடக்கு வனக்கோட்டம், தெற்கு வனக்கோட்டம் முதல் தெங்குமரஹாடா வரையிலான பகுதிகளில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், நகர் பகுதிகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத்தை ஒட்டியுள்ள கேளிக்கை விடுதிகளிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்பதால், அத்துமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ExplosionCrackersNilgiris
Advertisement:
Advertisement:
[X] Close