தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.
மயங்க் அகர்வால் 108, புஜாரா 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 63 ரன்களுடனும், ரகானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான இன்று விராட் கோலி அசத்தலாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய ரகானே 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 173 பந்துகளில் சதம் அடித்த விராட் கோலி, 295 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இது அவரது 7வது இரட்டை சதம். 150 ரன்களை கடந்த பிறகு அவர் ஒரு நாள் போட்டியைப் போல் விளையாடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த ஜடேஜாவும் 79 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதன் பிறகு விராட் - ஜடேஜா ஜோடி முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளை போல் விளையாடினர். சில ஓவர்களில் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினர். தென்னாப்ப்ரிக்க பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் பளிக்கவில்லை. இந்த ஜோடி 215 பந்துகளில் 200 ரன்களை குவித்தது. விராட் கோலி 334 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச ரன் இதுதான். அத்துடன், சச்சினையும்(248) அவர் முந்தினார்.
அதிரடியாக விளையாடி வந்த ஜடேஜா 104 பந்துகளில் 91 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் விளாசினார். அப்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
விராட் 254(336) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 2 சிக்ஸர்களுடன் 33 பவுண்டரிகளை விளாசினார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர், தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 13 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்