[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி... வரலாற்றை மாற்றி இந்தியா சாம்பியன்

india-junior-hockey-team-now-champion

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பை கைப்பற்றியுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் எட்டாவது நிமிடத்தில் குர்ஜாந்த் கோல் ரிவர்ஸ் ஸ்டிக் முறையில் நேர்த்தியாக கோல் அடித்து முன்னிலையை ஏற்படுத்தினார். இதனையடுத்து சிம்ரன்ஜித் சிங் இந்திய அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்திய அணி தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதுடன், கோல் வாய்ப்புகளையும் வீணடித்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் பெல்ஜியம் அணி கோல் அடித்தது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.

முன்னதாக இந்தத்தொடரில் இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால் 15 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close