[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

“உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டி”- சீமான்

contest-in-local-body-election-also-seeman

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும், பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில், மே தின எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சீமான் முடிவு பெற்றுள்ளது தேர்தல் மட்டும்தான் என்றும், தேடுதலும் ஓட்டமும் முடியவில்லை என்றும் கூறினார். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால், பாஜக வந்துவிடும் என்ற பரப்புரையால், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு வாக்கு சதவிகிதம் குறைந்ததாகவும் சீமான் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் போட்டியிடும் என்றும், பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் சீமான் தெரிவித்தார். இது எங்கள் தேசம் எங்களை ஆள விடுங்கள் என நாங்கள் பேசும் போது எங்களை விமர்சித்தவர்கள் மற்றவர்களை விமர்சிக்கவில்லை என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close