[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சபரி மலையில் படிபூஜை செய்ய 18 ஆண்டுகள் காத்திருங்கள்..!

sabari-malai-padipujai-was-will-happen-after-18-years

சபரி மலையில் படிபூஜை செய்ய விரும்புவோர் 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் 2033- ஆம் ஆண்டு வரை படிபூஜை நடத்துவதற்கான முன்பதிவு முடிவு பெற்றுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரி மலையில் பிரபலமான பூஜை படிபூஜை. எல்லாப்படிகளிலும் பட்டுவிரித்து அதில் தேங்காய், பூ, பழம் வைத்து விளக்கேற்றி செய்யப்படுகிறது இந்த படிபூஜை. இந்த பூஜை முடிந்த பின்பு தான் பூசாரிகள் கோவிலுக்குள் செல்வர்.

அப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற இந்த சிறப்பு பூஜை செய்ய ரூ.75000 கோவில் நிர்வாகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அந்தவகையில், 2033- ஆம் ஆண்டு வரை இந்த பூஜைக்கான முன்பதிவு நிறைவு பெற்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இனி படிபூஜை செய்ய விரும்புவோர் 2034- ஆம் ஆண்டுக்கு தான் முன்பதிவு செய்யமுடியும். மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், 60 நாட்களில் படிபூஜை கிடையாது எனவும் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close