[X] Close

நீதிபதி கர்ணன் கோவையில் கைது

Judge-Karnan-arrested

ஓய்வுபெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவை அருகே கைது செய்யப்பட்டார்.
 
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கட்டடத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை மேற்குவங்க காவல்துறையினர், தமிழக காவல்துறையினருடன் இணைந்து கைது செய்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தலைமறைவாக இருந்தார். அவரைக் கைது செய்யும்படி கொல்கத்தா போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி நீதிபதி கர்ணன் தரப்பில் மூன்று முறைக்கும் மேல் முறையிட்டார். ஆனால், அவரது முறையீடுகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவாக இருந்த கர்ணனை கைது செய்ய மேற்குவங்க காவல்துறையினர் தமிழகத்தில் முகாமிட்டிருந்தனர். இந்தநிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் உதவியுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற மேற்குவங்க போலீசார், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனைக் கைது செய்தனர்.     
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close