SKY-ன் தரமான செஞ்சுரி.. SRH-யை Silent ஆக்கி Revenge செய்த MI... CSK செம்ம ஹேப்பி அண்ணாச்சி!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான 55 ஆவது லீக் போட்டியும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருந்தது.
 மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முகநூல்

பரபரப்புக்கும், ட்விஸ்டுகளுக்கும் பஞ்சமே இல்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான 55 ஆவது லீக் போட்டியும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருந்தது.

அதிரடிக்கு பெயர் போன ஹைதராபாத் அணி விளையாடும் போட்டி என்றாலே சிக்ஸர் மழை பொழியும், புதிய ரெக்கார்டு படைப்பார்கள் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன ஆனது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்...

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்த உடனேயே ரசிகர்கள் ஷாக் ஆயிட்டாங்க. முதலில் பேட்டிங் செஞ்சாவே ஹைதராபாத் வீரர்கள் அசால்ட்டா 250 ரன் அடிச்சிடுவாங்களே ‘நீங்களே முதல்ல பேட்டிங் செஞ்சிருக்கலாமே பாண்டியா’ என மும்பை வீரர்கள் புலம்ப ஆரம்பித்தனர்.

அதுக்கேத்தப்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். ஆனால், டிராவிஸ் ஹெட்டுக்கு எக்கசக்கமான அதிர்ஷ்டமும் இந்தப் போட்டியில் இருந்தது. அவுட் ஆக வேண்டிய பல பந்துகளில் இருந்து எப்படியோ எஸ்கேப் ஆனார். அதுவும், அறிமுக வீரர் அன்ஷூல் வீசிய சிறப்பான பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி டிராவிஸ் ஹெட் வெளியேற ஆயத்தமான நேரத்தில் தான் ’நோ பால்’ சிக்னல் கொடுக்கப்பட்டது. பல லக் கிடைக்க ஹெட் அதிரடியாக ஒருமுனையில் விளையாடி வந்தாலும் பும்ரா ஓவரில் 11 ரன்னில் வீழ்ந்தார் அபிஷேக் ஷர்மா. அடுத்து வந்த மயங்க் அகர்வாலும் மீண்டும் ஒருமுறை சொதப்பி 5 ரன்னில் நடையைக்கட்டினார்.

பல வாய்ப்புகள் கிடைத்ததால் எப்படியும் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சற்று நேரம் நிதானமாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 20 ரன்னிலும், அதிரடிக்கு பெயர் போன ஹென்ரிச் க்ளாசன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள். ஹைதராபாத் ரசிகர்களுக்கு அடிமேல் அடி விழுந்தது.

சபாஸ் அகமதும் 10 ரன்னிற்கு நடையைக்கட்ட, மேக்ரோ ஜான்சென் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார் கேப்டன் பேட் கம்மின்ஸ். கம்மின்ஸின் இந்த அதிரடியால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் என்ற கௌரவமான ரன்களை எட்டியது.

பந்துவீச்சில் மும்பை அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பியுஸ் சாவ்லா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தாலும் 4 ஓவர்களில் வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஜஸ்பீரிட் பும்ரா.

200 ரன் அடிப்பாங்க, 250 ரன்கள் அடிப்பாங்க என எதிர்பார்த்திருந்த நிலையில், 173 ரன்களுக்குள் ஹைதராபாத்தை கட்டுப்படுத்தியது மும்பை அணியின் வெற்றியை கிட்டதட்ட பாதி உறுதி செய்தது. ஆனால், தொடர் தோல்விகளில் தவித்து கடைசி இடத்தில் இருந்துவரும் மும்பை அணி இந்த ஸ்கோரை எட்டுவார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அதற்கு ஏற்றாற் போல்தான் மும்பை அணியின் பேட்டிங்கும் இருந்தது. தொடக்கத்திலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். இஷான் கிஷன் 9 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 4 ரன்களுக்கும், நமன் திர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து நடையைக் கட்டினார்கள். 31 ரன்களுக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இன்றைக்கும் மும்பை அணி அவ்ளோதானா என நினைக்க வைத்துவிட்டார்கள். அந்த நேரத்தில்தான் ஜோடி சேர்ந்தனர் திலக் வர்மா மற்ரும் சூர்யகுமார் யாதவ். திலக் வர்மா மிகவும் நிதானமாக விளையாட மறுமுனையில் ரன் மழை பொழிந்தார் சூர்யா.

பந்து மிகவும் நின்று நிதானமாக வந்ததால் பெரிய ஹிட்டிங்கை தொடக்கத்தில் அடிக்க முடியவில்லை. ஆனாலும், நாலாபுறமும் ரன்களை பறக்க விட்டார் சூர்யகுமார் யாதவ். ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்ட அவர், 7 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர் விளாசினார்.

இடையில் இரண்டு, மூன்று ஓவர்கள் மிகவும் நிதானமாக விளையாடினர். நடராஜன் வீசிய 8ஆவது ஓவரில் 5 ரன்கள், நிதிஷ் குமார் வீசிய 9 ஆவது ஓவரில் 4 ரன்கள், கம்மின்ஸ் வீசிய 10 ஆவது ஓவரில் ஒரே ஒரு ரன்கள் என ரன்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது ஹைதரபாத். விக்கெட்டை விட்டுவிடக் கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தார்கள். 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.

 மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
csk vs pbks| டக் அவுட் ஆன தோனி.. உற்சாகத்தில் கை தட்டிய ப்ரீத்தி ஜிந்தா.. #ViralVideo

சற்று நேரம் பொறுமை காத்த சூர்யா 11 ஆவது ஓவரில் இருந்து ஓவருக்கு ஒரு பவுண்டரி என குறிவைத்து விளாசினார். 30 பந்துகளில் அரைசதம் அடித்த பிறகு அதிரடிக்கு முழுமையாக கியரை மாற்றினார் சூர்யா. அதனால் ஒவ்வொரு ஓவரில் சுமார் 10 ரன்கள் வந்து கொண்டே இருந்தது. மும்பையின் வெற்றியும் உறுதியாகிக் கொண்டே இருந்தது. பேட் கம்மின்ஸ் வீசிய 17 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசித் தள்ளினார் சூர்யகுமார் யாதவ். சதத்தையும் கிட்டதட்ட நெருங்கிவிட்டார். இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தநிலையில், 96 ரன்களுடன் களத்தில் இருந்தார் சூர்யா.

திலக் வர்மா சிங்கில் எடுத்துக் கொடுக்க தயக்கமே இல்லாமல் நடராஜன் வீசிய லோ புல்டாஸ் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு சதத்தை நிறைவு செய்தார் சூர்ய குமார் யாதவ். மும்பை அணியும் 16 பந்துகள் மீதமிருந்த தன்னுடைய நான்காவது வெற்றியை நடப்பு ஐபிஎல் சீசனில் பதிவு செய்தது. 51 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டர்களுடன் 102 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டி20 WC| தீவிரவாத அச்சுறுத்தல்.. வடபாகிஸ்தானில் இருந்து வந்த தகவல்.. பாதுகாப்பை அதிகரிக்கும் WI!

தோல்வியை தழுவினாலும் புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது. ஆனால், மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகி 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மும்பை அணியின் வெற்றி சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு மகிழ்ச்சியான செய்திதான். சென்னை, ஹைதராபாத், லக்னோ அணிகள் புள்ளிகள் அடிப்படையில் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com