'தயவுசெஞ்சு வாங்க.. உங்களதான் நம்பியிருக்கோம்'- இந்தியாவுக்கு கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

“மாலத்தீவு பொருளாதாரம், சுற்றுலாவையே அதிகம் நம்பியிருப்பதால், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்” என அந்நாட்டு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இப்ராஹிம் பைசல்
இப்ராஹிம் பைசல்twitter

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்தது. அந்த நேரத்தில், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்ததும், மேலும் விரிசலுக்கு வழிவகுத்தது.

முய்சின் அறிவிப்பு காரணமாக, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு கடந்த மார்ச் மாதம் தாயகம் திரும்பியது. தொடர்ந்து, வரும் மே 10ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எனினும், பொருளாதாரரீதியாக அந்த நாடு, சிக்கலில் தவித்து வருகிறது. காரணம், இரு நாடுகளுக்கு இடையிலான விரிசலால் இந்தியர்களின் சுற்றுலா வருகை அங்கு குறைந்துள்ளது. பொருளாதாரத்தில் பெரும்பாலும் சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பியுள்ள மாலத்தீவுக்கு, தற்போது இந்தியர்களின் வருகை குறைந்ததால் சமீபகாலமாக சிக்கலைச் சந்தித்துவருகிறது.

இதையும் படிக்க: ”வாக்கு ஜிகாத்தா, ராம ராஜ்ஜியமா? நீங்கதான் முடிவு பண்ணணும்” - பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பரப்புரை

இப்ராஹிம் பைசல்
மாலத்தீவு: பொதுத் தேர்தலில் சீனாவின் ஆதரவு பெற்ற அதிபர் முகம்மது முய்சுயின் கட்சி அமோக வெற்றி!

இந்த நிலையில் அந்த நாட்டுச் சுற்றுலாத் துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “மாலத்தீவு பொருளாதாரம், சுற்றுலாவையே அதிகம் நம்பியிருப்பதால், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்றுப் பிணைப்பு உள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்புச் சூழலையே மேம்படுத்த விரும்புகிறோம். மாலத்தீவு அரசும் மாலத்தீவு மக்களும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் அன்புடன் வரவேற்கும். இந்தியர்கள் தயவுசெய்து மாலத்தீவு நாட்டிற்குச் சுற்றுலாவுக்கு வரவேண்டும். மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சராக எனது கோரிக்கை இதுதான். ஏனென்றால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஹரியானா| பாஜக அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்.. அடுத்து என்ன?

இப்ராஹிம் பைசல்
“பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com